Pages

Monday, 10 October 2016

"ஒருதலை அன்பு"

"பால் மடி முட்டும் கன்றுக்குட்டியா
பிறந்து   இருந்தால்
அவள் கைகள்
என் கழுத்தை தழுவி இருக்கும் .....
பேசும் கிளியாக
பிறந்து இருந்தால்
அவள் கைகளில்
தவழ்ந்து இருப்பேன்...
நாய் குட்டியாக
பிறந்து   இருந்தால்
அவள் என்னை தூக்கி
கொஞ்சி இருப்பாள்...
நினைக்க தெரிந்த
மனிதனாக பிறந்ததால்
நினைக்க மட்டுமே
முடிகிறது
நெருங்க முடியவில்லை
நொறுங்கி போகிறேன்
நான் ...."
-நதி @ நரேந்திரன்