தேவி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு , அவளது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தாள்.அப்பொழுது அவளுக்கு முன்னே ஒரு இளம் ஜோடி குழந்தை தனம் கலந்த உரையாடலோடு பிண்ணிக்கொண்டு இருந்தார்கள்.இதை கண்ட தேவிக்கு பாபு ஞாபகம் வந்தது,இன்னும் சொல்ல போனால் அவள் அவனை மறக்காத நொடிபொழுது கிடையாது.அவர்களுது உரையாடல் தேவி பாபுவின் உரையாடலை தேவிக்கு நினைவு படுத்தியது.தென்றலானது அவள் உடல்தனை உரசியபோது அவள் அவளை மறந்து கீழே விழ போனாள்.அப்போது அவளது உடலினை யாரோ தாங்கிப்பிடிப்பது போல் இருந்தது.அவள் கண்விழித்து பார்த்த போது அவள் அதிர்ச்சிக்கு உள்ளானாள்.காரணம் அவள் உடலை தாங்கிப்பிடித்தது அவளின் உயிரான பாபு.பாபு அவளை எழுப்பினான். அவள் விழித்து கொண்டாள்.தேவி பாபுவிடம் "ஹே! நீ இங்கு எப்புடி?"."நான் ஒரு வேலையா இங்கு வந்தேன், நீ வண்டியில ஏறத பார்த்தேன்.பின்னாடியே நானும் ஏறிட்டேன்"என்றான் தேவியிடம். தேவி பாபுவிடம் கேட்டால்,"நான் இந்த வண்டியில ஏறுனே, பின்னாடியே ஏறிட்ட?,இதே நான் உயிரை விட்ட பின்னாடியே வந்துருவிய?",பாபு ஆம் என்று கூறி தலை அசைத்தான். தேவி தன்னையும் மறந்து தன் மேல் அன்பு கொண்ட பாபு கட்டிபிடித்தாள், அதோடு அவன் காதினில்"உன்னோடு வாழவே! நான் பிறந்து உள்ளேன். உன்னை விட்டு நான் பிரிய மாட்டேன்."என்றாள்.
Monday, 6 February 2012
•"தேவிகா"-சிறுக்கதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment