Pages

Sunday, 9 September 2012

"கூற்றின் கூறுகள்"



  எனது தோழமையே! எமது மக்களே! உங்களைப் போல் அவ்வபோது எனக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன? அவைகளை பற்றி இங்கு கூறவுள்ளேன்.அதோடு மட்டுமில்லாமல் அந்த கேள்விகளுக்கு என்னால் உணரப்பட்ட! யூகிக்க முடிந்த விளக்கங்களையும் கூறுகிறேன். பார்ப்போமா?
    பருவத்திற்கேற்ப பல கேள்விகள் எழுந்தன.அதனுள் முதன்மை பெற்ற!சிறப்பை பெற்ற கேள்வி இது தான் .
1 .மனம் என்பது எது?
2 .மனதை குறிப்பதற்கு எதற்கு நாம் நமது இதயத்தை சுட்டிக் காட்டுகின்றோம்?
3 .மனம் என்பது நினைவுகளை கொண்டது என்றால்!
4 .நினைவுகளை நினைவுபடுத்த ஏன் நாம் மூளையை பயன்படுத்துகின்றோம் ?
  மன்னிக்கவும் நினைவு என்பது எண்ணம் தானே!   அப்படியென்றால் மனமும் மூளையில் தானே இருக்கும்.இதற்கு உங்களின் கருத்து என்ன?
   இன்னும் ஒரு கேள்வி "நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் நமது மூளை ஏன் நம் மனதினை கட்டுப்படுத்தாது?"
    மூளையின் செயல்பாட்டில் நடக்கும் மனதினை ஏன் நாம் தனித்தனியாக பார்க்கின்றோம்?. நான் உரைப்பேன் "உன் மனதை கட்டுப்படுத்த வேண்டுமா ? முதலில்  உன் மூளையும் உன் மனமும் ஒன்றுக்குள் ஒன்று என புரிந்து கொள்ளுங்கள் .அப்போது தான்  நீங்கள்  திறைமையானவர்." 

No comments:

Post a Comment