Pages

Friday, 21 September 2012

காதல் வெகுளி



இது ஒரு காதலனின் வெகுளி தனம்..
அவனின் அன்பு சிதறலின் வரிகள்.....
இதோ உங்களுக்காக....
எலே அம்மு  குட்டி,
               நான் மாமா  பேசறேன் செல்லம்.அம்முனி எங்க மாமாவும் எங்க அத்தையும் எங்க மச்சானும் சவுக்கியமா இருக்காங்களான்னு பதில் அனுப்புடி என் தங்கமே    ஊருக்கு பத்திரமாக போய்டியா  செல்லம்.என் மேல கோபமா? நீ என் பத்தி எது நினைத்தாலும் சரி  அம்முஎன்னை திட்டி விடு. என்னை பற்றி  எதுவாக இருந்தாலும் சரி எனக்கு மெயில் பண்ணு. நான் நேற்று வந்ததே உன்னுடன் பேச தான் ஆனால் உன் வகுப்பு மாணவர்கள்  வந்ததால் என்னால் பேச முடியவில்லை. முதலில் என்னை பற்றி கூறி  கொள்கிறேன் நான் தண்ணி அடிப்பேன்,தம் அடிப்பேன்,ரொம்ப அதிகமா இல்ல என்றாவுது  ஒரு நாள் தான்.என்னடா இவன் இப்படி சொல்லரானு நினைக்காதே  நீ புடவையில் ரொம்ப வசீகரமாக இருந்தப்ப அந்த நாள் என்னால் மறக்கமுடியாத நாள் 21-03 -09 நீ அணிந்த புடவியின் நிறம் நீளம் நான் என்னை கண்டு ரசித்ததைவிட பிஞ்சு குழந்திகளின் கொஞ்சலை கண்டு ரசித்த சுகம் உன்னை கண்டதால் பெற்றேன்.நான் உனக்கு வைத்த செல்ல பெயர்கள்அனி குட்டி,swam -sweat wonderful anjel for me (or) mylife, rosebird , பெண்ணேறு-பெண் சிங்கம்,மானே,தேனே,பொன்னே,காற்றிக்கு வழி காட்டிய கார்முகிலே,எனக்கு  உன் மொபைல் நம்பரை  மெயில் அனுப்புநீ என் காதலி மட்டும் அல்ல என் மனைவியும் ஆவாய்.உன்னால் எனக்கு அதிக நண்பர்கள் கிடைத்தார்கள்.நம் கல்லூரி மாணவர்கள் நம்மை கிண்டல் செய்வதன் மூலம் ஒன்றாக செயல் படுவதை கண்டு  மலைத்து விட்டேன். நீ உன் தோழிகளை திட்டும் போது உன் சிரிப்பு கோபம் அழகு எல்லாம் ஒன்றாக சேர்த்து கண்டேன் உன் முகத்தில்.இந்த மாடல் தேர்வின் போது உன்னை பார்த்து கொண்டே தேர்வு எழுதினேன்.உனக்காக நான் வாங்கிய கைகுட்டையும்,தங்க நிற கீ சைனும்,என்னோடு சேர்ந்து உனக்காக தவம் கிடக்கின்றனவாறேனுங்க என் பொண்டாடிங்க !  
 இப்படிக்கு 
ஈஸ்வரன் 

Sunday, 9 September 2012

"கூற்றின் கூறுகள்"



  எனது தோழமையே! எமது மக்களே! உங்களைப் போல் அவ்வபோது எனக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன? அவைகளை பற்றி இங்கு கூறவுள்ளேன்.அதோடு மட்டுமில்லாமல் அந்த கேள்விகளுக்கு என்னால் உணரப்பட்ட! யூகிக்க முடிந்த விளக்கங்களையும் கூறுகிறேன். பார்ப்போமா?
    பருவத்திற்கேற்ப பல கேள்விகள் எழுந்தன.அதனுள் முதன்மை பெற்ற!சிறப்பை பெற்ற கேள்வி இது தான் .
1 .மனம் என்பது எது?
2 .மனதை குறிப்பதற்கு எதற்கு நாம் நமது இதயத்தை சுட்டிக் காட்டுகின்றோம்?
3 .மனம் என்பது நினைவுகளை கொண்டது என்றால்!
4 .நினைவுகளை நினைவுபடுத்த ஏன் நாம் மூளையை பயன்படுத்துகின்றோம் ?
  மன்னிக்கவும் நினைவு என்பது எண்ணம் தானே!   அப்படியென்றால் மனமும் மூளையில் தானே இருக்கும்.இதற்கு உங்களின் கருத்து என்ன?
   இன்னும் ஒரு கேள்வி "நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் நமது மூளை ஏன் நம் மனதினை கட்டுப்படுத்தாது?"
    மூளையின் செயல்பாட்டில் நடக்கும் மனதினை ஏன் நாம் தனித்தனியாக பார்க்கின்றோம்?. நான் உரைப்பேன் "உன் மனதை கட்டுப்படுத்த வேண்டுமா ? முதலில்  உன் மூளையும் உன் மனமும் ஒன்றுக்குள் ஒன்று என புரிந்து கொள்ளுங்கள் .அப்போது தான்  நீங்கள்  திறைமையானவர்."