Pages

Friday, 21 August 2015

"காற்றிற்கு வேலி"

"அரவணைக்கும் அன்பிற்கும்- என் 
 அன்னையின் பாசத்திற்கும் 
  அளவு கிடையாது!
 இடிக்கின்ற இடிக்கும்-இறங்கி
 வரும்  மின்னலுக்கும் 
 இடையூறு கிடையாது!
 கலைஞர்களின் கலைக்கும் - அவர்களது 
 கற்பனைக் குதிரைக்கும் 
கடிவாளம் கிடையாது!
 பூக்களின் வாசனைக்கும் - அதை 
வட்டமிடும் வண்டுகளுக்கும் 
வன்முறை கிடையாது!
 ஆழ்கடலின் அமைதிக்கும் - மனிதனின்
ஆழ்மனது துய்மைக்கும்
எல்லைகள் கிடையாது!
விண்மீன்கள் விற்பநிக்கும் - வான் 
 வெண்ணிலவை வாங்கிடவும்
 கடைகள் கிடையாது!
முத்து குளிப்பதற்கும் - முன்னேற 
முயற்சி எடுப்பதற்கும்
முடிவுரை கிடையாது!
நண்பனின் நட்பிற்கும் - மக்கள் 
நலம் விரும்பிகளின் அன்பிற்கும் 
நிகரேதும் கிடையாது!
பாசமில்லா மனதிற்கும் - செம்மை
குருதியில்லா உடலுக்கும்
  பலமேதும் கிடையாது!
தடமில்ல சாலைக்கும்-வாழ்வில்
 குறிக்கோளற்ற மனிதனுக்கும் 
முன்னேற்றம் கிடையாது!
இனித்திடும் தேனுக்கும் -நமது
இயற்கை அன்னைக்கும் 
இணையேதும் கிடையாது!
அறிஞர்களின் அறிவிற்கும்-முத்தமிழ்
கவிஞர்களின் கவிதைக்கும் 
தடையேதும்  கிடையாது!
தீயவனை காப்பதற்கும்-சிதைந்த
கற்சிலை அமர்வதற்கும்
கருவறை கிடையாது!
சாதிக்கும் மாணவர்களுக்கும்- நல்வழி
போதிக்கும் ஆசிரியர்களுக்கும்
பேதைமை கிடையாது!
இயற்கையின் படைப்பிற்கும் -ஈடு 
செய்திட எதுவுமே கிடையாது!
பாரினில்,
பரிதவிக்க பதறவைக்கும்
காற்றிற்கு  வேலி கிடையாது!
ஆனால்
வேகத்தை விவேகமாக்கி- அதை 
அளவிட முடியா ஆற்றலாய்
ஆக்கிவிட முடியும்!
இருந்தும்
காற்றற்று மனதிற்கு 
கரை போடாமல் போனால் - அது
களர் நிலமாய் 
களம் கண்டு விடும்!
எனவே
மனதினை மென்மையாக்கு -அதை
கொண்டு வாழ்வினை
செம்மையாக்கு!
அன்பு என்னும் விதைவித்து 
அறிவினை விருட்சமாக்கு!
தவழ்ந்து  வரும் -தென்றலை
தாலாட்டு!
தாவி வரும் -சூறாவளிக்கு 
தடைப்போட்டு!
நீ என்றென்றும் - வெற்றி
நடைப்போட்டு!
உலகை உன் வசமாக்கு!"
 -பா.நதி @ நரேந்திரன்

No comments:

Post a Comment