Pages

Tuesday, 3 January 2017

எனக்கு பிடித்த பாடல் 40

அடியே  அழகே  என்  அழகே  அடியே
பேசாம  நூறு  நூறு  கூறு  போடாத
வழியே  வழியே  என்  ஒளியே  ஒளியே
நான் ஒன்னும்  பூதமில்லா  தூரம்  ஓடாத
காதோரம்  நீ  எரிச்ச  வார்த்தை  வந்து  கீறுத்தே
ஆனாலும்  நீ  தெளிக்க  காதல்  உள்ள  ஊறுதே
வாயாடி  பேயா   என்  தூக்கம்  தூக்கி  போற

அடியே  அழகே  என்  அழகே  அடியே
பேசாம  நூறு  நூறு  கூறு  போடாத
வழியே  வழியே  என்  ஒளியே  ஒளியே
நான் ஒன்னும்  பூதமில்லா  தூரம்  ஓடாத

போன  போறா  தான  வருவா  மெதப்புல  திரிஞ்சேன்
வீராப்பெல்லாம்  வீனா  போச்சு  பொசுக்குன்னு  ஒடஞ்சேன்
உன்  சோக  பார்வை  ஒரசுத்து  மேல
சிரிக்கிற  ஓசை  சிரிக்குது  ஆள
தீ  தூவி  தீ  தூவி  போன
அவ  வேணும்  நானும்  வாழ

ஏனோ  உன்ன  பாத  உள்ள  சுருக்குனு  வருது
ஆனா  கிட்ட  நீயா  வந்த  மனுசங்க   விழுது
எதுக்கிந்த  கோபம்  நடிச்சது   போதும்
மறைஞ்சு  நீ  பாக்கும்  வெடுக்குது  சாயம்
நேத்தே  நான்  தோதென்  அட  இது  தான  உன்  வேகம்

அடியே  அழகே  என்  அழகே  அடியே
பேசாம  நூறு  நூறு  கூறு  போடாத
வழியே  வழியே  என்  ஒளியே  ஒளியே
நான் ஒன்னும்  பூதமில்லா  தூரம்  ஓடாத
காதோரம்  நீ  எரிச்ச  வார்த்தை  வந்து  கீறுத்தே
ஆனாலும்  நீ  தெளிக்க  காதல்  உள்ள  ஊறுதே
வாயாடி  பேயா   என்  தூக்கம்  தூக்கி  போற

எனது பொன்மொழி


Monday, 10 October 2016

"ஒருதலை அன்பு"

"பால் மடி முட்டும் கன்றுக்குட்டியா
பிறந்து   இருந்தால்
அவள் கைகள்
என் கழுத்தை தழுவி இருக்கும் .....
பேசும் கிளியாக
பிறந்து இருந்தால்
அவள் கைகளில்
தவழ்ந்து இருப்பேன்...
நாய் குட்டியாக
பிறந்து   இருந்தால்
அவள் என்னை தூக்கி
கொஞ்சி இருப்பாள்...
நினைக்க தெரிந்த
மனிதனாக பிறந்ததால்
நினைக்க மட்டுமே
முடிகிறது
நெருங்க முடியவில்லை
நொறுங்கி போகிறேன்
நான் ...."
-நதி @ நரேந்திரன் 

Friday, 21 August 2015

"எதிர்பார்ப்புகள்"

 "எதிர்பார்ப்புகள்"
   " எதிர்பார்த்த நேரத்தில்
     எதிர்பார்த்த நிகழ்வுகள்
     எளிதில் நடந்துவிட்டால்
     எழில் குறைந்துவிடும்
     எனவே காத்திரு!
     எதிர்பார்த்திரு! "
        -பா.நதி@ நரேந்திரன் 

"காற்றிற்கு வேலி"

"அரவணைக்கும் அன்பிற்கும்- என் 
 அன்னையின் பாசத்திற்கும் 
  அளவு கிடையாது!
 இடிக்கின்ற இடிக்கும்-இறங்கி
 வரும்  மின்னலுக்கும் 
 இடையூறு கிடையாது!
 கலைஞர்களின் கலைக்கும் - அவர்களது 
 கற்பனைக் குதிரைக்கும் 
கடிவாளம் கிடையாது!
 பூக்களின் வாசனைக்கும் - அதை 
வட்டமிடும் வண்டுகளுக்கும் 
வன்முறை கிடையாது!
 ஆழ்கடலின் அமைதிக்கும் - மனிதனின்
ஆழ்மனது துய்மைக்கும்
எல்லைகள் கிடையாது!
விண்மீன்கள் விற்பநிக்கும் - வான் 
 வெண்ணிலவை வாங்கிடவும்
 கடைகள் கிடையாது!
முத்து குளிப்பதற்கும் - முன்னேற 
முயற்சி எடுப்பதற்கும்
முடிவுரை கிடையாது!
நண்பனின் நட்பிற்கும் - மக்கள் 
நலம் விரும்பிகளின் அன்பிற்கும் 
நிகரேதும் கிடையாது!
பாசமில்லா மனதிற்கும் - செம்மை
குருதியில்லா உடலுக்கும்
  பலமேதும் கிடையாது!
தடமில்ல சாலைக்கும்-வாழ்வில்
 குறிக்கோளற்ற மனிதனுக்கும் 
முன்னேற்றம் கிடையாது!
இனித்திடும் தேனுக்கும் -நமது
இயற்கை அன்னைக்கும் 
இணையேதும் கிடையாது!
அறிஞர்களின் அறிவிற்கும்-முத்தமிழ்
கவிஞர்களின் கவிதைக்கும் 
தடையேதும்  கிடையாது!
தீயவனை காப்பதற்கும்-சிதைந்த
கற்சிலை அமர்வதற்கும்
கருவறை கிடையாது!
சாதிக்கும் மாணவர்களுக்கும்- நல்வழி
போதிக்கும் ஆசிரியர்களுக்கும்
பேதைமை கிடையாது!
இயற்கையின் படைப்பிற்கும் -ஈடு 
செய்திட எதுவுமே கிடையாது!
பாரினில்,
பரிதவிக்க பதறவைக்கும்
காற்றிற்கு  வேலி கிடையாது!
ஆனால்
வேகத்தை விவேகமாக்கி- அதை 
அளவிட முடியா ஆற்றலாய்
ஆக்கிவிட முடியும்!
இருந்தும்
காற்றற்று மனதிற்கு 
கரை போடாமல் போனால் - அது
களர் நிலமாய் 
களம் கண்டு விடும்!
எனவே
மனதினை மென்மையாக்கு -அதை
கொண்டு வாழ்வினை
செம்மையாக்கு!
அன்பு என்னும் விதைவித்து 
அறிவினை விருட்சமாக்கு!
தவழ்ந்து  வரும் -தென்றலை
தாலாட்டு!
தாவி வரும் -சூறாவளிக்கு 
தடைப்போட்டு!
நீ என்றென்றும் - வெற்றி
நடைப்போட்டு!
உலகை உன் வசமாக்கு!"
 -பா.நதி @ நரேந்திரன்

Thursday, 6 August 2015

"ஆயிரம்"

" தத்துவம் நிறைந்த 
    தவப்புதல்வர்கள் ஆயிரம்!
    மகத்துவம் வாய்ந்த 
    மன்னர்கள் ஆயிரம்!
    இன்பம் தரும் 
    இன்னிசை ஆயிரம்!
    அன்பு அளிக்கும் 
    அருஞ்சொற்கள் ஆயிரம்!
    பன்மை வளர்த்த 
    பகுத்தறிவாளர்கள் ஆயிரம்!
    நன்மை வளர்த்த 
    நல்லறிஞர்கள் ஆயிரம்!
    அழகை வெளிகாட்டிய 
    அற்புதங்கள் ஆயிரம்!
    திசைகள் முழங்கும் 
    திறமைசாலிகள் ஆயிரம்! 
    இசைகள் வழங்கும் 
    இலக்கியங்கள் ஆயிரம்!
    உயிர்  காத்த 
    உள்ளங்கள் ஆயிரம்!
    பயிரை காத்த 
    பள்ளங்கள் ஆயிரம்!
    பேரறிவு கொண்ட 
    பேச்சாளர்கள் ஆயிரம்!
    அறிவு நிறைந்த 
     அறிஞர்கள் ஆயிரம்!
    மதி பெற்ற 
    மங்கையர்கள் ஆயிரம்!
    வித்தை நிறைந்த 
    விடுகதைகள் ஆயிரம்!
    கலை சார்ந்த 
    கடல்கள் ஆயிரம்!
    மலையாக குவிந்த 
    மடல்கள் ஆயிரம்!
    சிலைகளை வடிவமைத்த  
    சிற்பிகள் ஆயிரம்!
    தவறில்லா 
    தவிப்புகள் ஆயிரம்!
    துளை இதயத்தின் 
    துடிப்புகள் ஆயிரம்!
    மறை கொண்ட 
    மனிதர்கள் ஆயிரம்!
    சிறை கண்ட 
    சிந்தனையாளர்கள் ஆயிரம்!
    எளிதில் எழுகின்ற 
    எண்ணங்கள் ஆயிரம்!
    விரைவாக விளைகின்ற 
    விதைகள் ஆயிரம்!
    முகம் வெளிபடுத்திய 
    முகவரிகள் ஆயிரம்!
    சிரம் நிமிர்ந்த 
    சிகரங்கள் ஆயிரம்!
    தடை தகர்த்து 
    நடை போட்டவர்கள் ஆயிரம்!
    தொடுவானம் சொன்ன 
    தொடர்கள் ஆயிரம்!
    பூலோகத்து நன் 
    பூக்கள் ஆயிரம்!
    புலவர்கள் படைத்த 
    புலமைகள் ஆயிரம்!
    வரிகள் உரைத்த 
    வல்லமைகள் ஆயிரம்!
    வாகை சூடிய 
    வாரணங்கள் ஆயிரம்!
    வழியில் கண்ட 
    வலிகள் ஆயிரம்!
    விழியில் கண்ட 
    வலிமைகள் ஆயிரம்!
    மனம் வீசும் 
    மலர்கள் ஆயிரம்!
    பலம் சேர்க்கும் 
    படைகள் ஆயிரம்!
    விண்ணில்  விளைந்த 
    விண்மீன்கள் ஆயிரம்!
    என் உள்ளம் கனிந்த 
    நல்வாழ்த்துகள் ஆயிரம்!" 
      --பா.நதி@ நரேந்திரன்